புதுமை கண்ட பதுமைகள்
அனுதினம் இரவில் அரைகுறை ஆட்டமா !
மதுபானக் கடைகளில் மகளிர் கூட்டமா !
பாரதி கண்ட புதுமைப்பெண் இவள்தாமோ !
நாகரீக மதி கொண்ட தமிழ்த்திரு மகள்தாமோ !
பெண்ணடிமை நீங்கின சுதந்திரம் இதுதானோ !
நீர் சுதந்திரம் கேட்ட சூழ்ச்சியும் அதுதானோ !
நாங்கள் பழமையை கட்டியும் அழவில்லை !
புதுமையை சுட்டியும் பயனில்லை !
அழகொரு பதுமைக்கு அழிவொன்று வேண்டாமே !
கலாச்சாரம் மறைந்தாலும் கணம் எண்ணி பார்ப்போமே !