மகராசி பெத்த மக

வயக்காட்டுல நல்லபாம்பு
பச்சப்புள்ளக்கி பக்கத்துல
படம் எடுத்துக்கிருந்திச்சாம்.....
படத்துமேலயே அடிச்சிக் கொன்னுச்சாம்
செலம்பாயி அப்பாயி...

அதிசயிச்சிக் கேட்டு...
அவுக வந்துருவாக.... சோறு
கொழஞ்சிபோயிரும்.... இந்தா
எறக்கி வச்சிப்புட்டு வாரம்ன்னு
கெளம்பி ஓடுன வயிதேகி அக்கா...

எதுக்கால வந்து ..
"மதனி..... நா வடிச்சி
வச்சிட்டேம்.. பதறாமப் போங்க...
அவுக.. நெகபாலீசு கொண்டாந்தாக..
உங்களுக்கும் ஒண்ணு..
வெளக்குமாடத்துக்குப்
பக்கத்துல வச்சிருக்கேம்...ன்னு
உரிமையாக் கொண்டாடும்
பூவரசி அண்ணி....

அம்மா..... இன்னைக்கி செஞ்ச
மாதரியே நாளைக்கும்
குடுமான்னு சாப்பாட்டு டப்பா
குடுத்த சித்ரா பாப்பா...

அப்பிடியே வயித்தப் புடிச்சிக்கிட்டு
உக்கார...

ஊருசனம் மொத்தம் வந்து
மஞ்சப்பூசி ...
மகராசி பெத்த மக.. மகராசியா இரு..ன்னு
கொண்டாட..
ஊருமுழுக்க பெண்வாசம்....

..பெண்கள் தின வாழ்த்துக்கள்...!!!


தளத் தோழமைகள் அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்.....

எழுதியவர் : நல்லை.சரவணா (8-Mar-15, 9:00 am)
பார்வை : 220

மேலே