தலை குனிய வேண்டும் ஆண்களே…-Mano Red

பெண்கள் தினமா..??
நாக்கு கூசுகிறது..!!
தலை குனிய வேண்டும் ஆண்களே..!!
எந்த முகத்தை வைத்து
பெண்களை கொண்டாட போகிறோம்..??

பகுத்தறிவு வளர்க்க
பள்ளிக்கு அனுப்பினால்,
மதிப்பெண் காரணம்காட்டி
ஆசிரியன் அரவணைக்கிறான்..!!

நட்பை நம்பி
ஆண் நண்பனுடன் பழகவிட்டால்,
உடைமாற்றும் வேளையில்
கைப்பேசியில் படமெடுக்கிறான்…!!

கண்ணீர் சூழ
கடவுளிடம் கேட்டால்,
ஆறுதலாய் தடவி
ஆண்டவன் பெயரில்
அசிங்கம் செய்கிறான் பூசாரி…!!

அந்நிய முகம் ஏதுமில்லை,
அக்கம்பக்கம் புதிதில்லை,
இழிபிறவிகள் அத்தனை பேரும்
தெரிந்த ஆண்கள் தானே..!!

சமத்துவம் வந்ததென
சத்தமாய் கூறுபவர்களே,
முப்பத்தி மூன்று சதவிகிதம்
இடம் ஒதுக்கி என்ன செய்ய..??
முதலில் பெண்களை
பெண்களாக வாழ இடம் கொடுங்கள்..!!

எழுதியவர் : மனோ ரெட் (8-Mar-15, 9:03 am)
பார்வை : 1260

மேலே