வெல்வாய் பெண்ணே
வெல்வாய் பெண்ணே....!!!
கள்ளிப்பால் யாவையுமே கடந்தே வந்தாய்
காமுகரின் வாய் தப்பி நீயே வாழ்வாய்
வாழ்க்கைவழி இடர்தருமே பல வல்லூறு
வதம் செய்தழித்து பெண்ணே நீ படை வரலாறு....!!
காதல் என்ற சாகசத்தில் காம கூட்டங்கள்
வலைவீசி திரியுது பார் என்ன வேடங்கள்
இனங்கண்டு காதல் கொள்ள இல்லை தீமைகள்
ஒருவனுக்கு ஒருத்தி வாழ்வில் ஏக நன்மைகள்...!!
ஆண்டாண்டு காலங்களாய் அஞ்சி...அஞ்சி...
வாழ்ந்ததெல்லாம் போதும் நீ கெஞ்சி... கெஞ்சி...
ஆணிற்கு சமமானோம் கல்வி பதவி - பெண்ணே
வாழ்ந்திடுவாய் அடிமைத் தனத்தை புறமே தள்ளி...!!
இயலாது... இயலாது... எதுவும் உன்னால்
ஏளனந்தான் செய்திட்டார் உந்தன் பின்னால்
பேருந்து, ரயிலென்று விமானமும் ஒட்டி - பெண்ணே
ஏளனத்தை புதைத்தாயே சாகசம் காட்டி....!!
எவரெஸ்ட்டு சிகரம் ஏறி தொட்ட சாதனை
கரீம் ஷெர்பாவை பாரென்ன கம்பீர தோரணை
குத்து சண்டை தங்கமங்கை மேரிகோமை போல்
சாதித்து பெண்ணே நீ நிமிர்த்து உந்தன் தோள்...!!
முடியும் என்ற நம்பிக்கையில் எதையும் துவங்கு
முடிவினிலே வெற்றிகண்டு உயர்வாய் சிறந்து
வானம் எட்டும் தூரம்தான் கைகள் உயர்த்து - பெண்ணே
வெற்றிமாலை தொடுத்திடலாம் விண்பூக்கள் பறித்து...!!
==============================================
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்களுடன்,
சொ. சாந்தி
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
===============================================
குறிப்பு: "இலக்கியச் சோலை" மாத இதழ் நடத்திய
கவி அரங்கில் 28-02-2015 அன்று வாசிக்கப்பட்ட
கவிதை