உலகிற்கே நீதான் விழுது

பெண்ணே!
உன் சிறப்புரைக்க‌
ஒரு நாள் போதுமா?
உன் சிறப்புகளை
வார்த்தைகளால்
எழுதிடவும் முடியுமா?

எங்கெங்கு காணினும்
பல இல்லங்களிலும்
நல்ல உள்ளங்களிலும்
நிலைத்திருந்து
உலகினை வழி நடத்து..

ஒரு நாளில் மட்டும்
உன் புகழ் பேசிவிட்டு
மற்ற நாளெல்லாம்
உன்னை ஏசிடும்
மனிதரை உதாசினப்படுத்து..

உன் வழியில் நடந்து
உனக்கான வரலாறை
நீ எழுது...
உலகுள்ள நாள்வரைக்கும்
அன்பில் அனைவருமே
உம்மை தொழுது..

உள்ளங்களை நீ உழுது
பார்த்திடுவாய் நன்றாய் பழுது
துயரத்தில் ஏனோ அழுது
உலகிற்கே நீதான் விழுது....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (8-Mar-15, 10:48 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 3408

மேலே