துடிக்காதா மனது கொதிக்காத குருதி - உதயா

பிழித்தெடுத்த தேங்காவாய்
வாடியே பிறந்த மலராய்
அழிகியப் பழமாய்
சிலருக்கு இதுமட்டுமே வரமாய்

மாடிகளின் விளைச்சல்
உழு நிலங்களின் மாய்ச்சல்
வறுமையின் வளர்ச்சிகள்
இதுவே என் நாட்டின் செழிப்புகள்

உறவுகளின் கானல்
பரிவெனும் சாயல்
அன்பெனும் வேஷம்
துரோகமே இங்கு பாசம்

காலில் ஏறும் ஆணியாய்
நெஞ்சில் தவழும் நெருஞ்சி முள்ளாய்
தொண்டையில் சிக்கிய மீனின் எலும்பாய்
பல முதியோருக்கு இதுவே வாழ்வின் பரிசாய்

கழிவறையில் மிதக்கும் மலமாய்
சாக்கடையில் மிதக்கும் எச்சிலாய்
சமூக மக்கள் பலருக்கு
மதுவின் துணையோடு இதுவே வாழ்வாய்

பூக்களை பார்ப்பதில் பலருக்கு மோகம்
பூக்களை கசக்கவே நினைக்குது தாகம்
பெண்களுக்கு அரங்கேறும் அவலம்
இதுவே என் நாட்டின் இன்னிசை கோலம்

சாலையில் உயிருக்கு தவிக்கும் மனிதன்
கண்டும் காணாமல் போகும்
மக்களின் பரந்த மனிதபிமானம்
இதுவே என் நாட்டின் இரங்கா பாரம்

செல்களின் ஒருங்கிணைப்பு
இரத்தத்தின் உருவ அமைப்பு
மக்களின் அலட்சியம்
அநியாயத்தின் செழிப்பு

தீராதா கொடுமையின் மோகம்
தனியாதா சாத்தானின் தாகம்
இனியும் தொடருமா விதியின் பயணம்
என் மதியும் இனி உறங்க நினைக்குமா

உனக்கு உடலில் குருதி இல்லையா
கழிவின் நீரா குருதி உனக்கு
துடிக்கும் உணர்வு உடலில் இல்லையா
உணர்வேயில்லா பிண உடலா உனக்கு

தனக்குள் எரியும் தீயினை இணைப்போம்
கொடுஞ்செயலை அதிலே எரிபொருளாய் எரிப்போம்
நறுமணக் காற்று இனி நாட்டினில் வீசுமா
நம் செயலால் நாடு இனி ஜொலிக்காமல் போகுமா

எழுதியவர் : udayakumar (8-Mar-15, 12:52 pm)
சேர்த்தது : உதயகுமார்
பார்வை : 360

மேலே