நினைவுகள்
சுவரெங்கும் சித்திரங்கள்
கோடுகளாய் கிறுக்கல்களாய்
புள்ளிகளுடன் விசித்திரங்கள்
நிறைந்த வெளியாய்
தீட்டியவர் மறந்திருக்ககூடும்
பதிந்த அழுத்தங்கள் மறையா
வண்ணச்சாந்து விரல் தொட்டு
வெற்றிடமாய் நகர்ந்தவரும்
தூரிகையை எறிந்து போனவரும்
காய்ந்த பூச்செடியை தழுவும் கண்கள்
மழை தினமொன்றில் கூடு திரும்ப தவிக்கும் ஒரு பறவை
நட்சத்திரங்கள் கூடி உருவமாக இணைந்தன
தாமரை இலையின் ஊடே ஊடல் கொண்ட தண்ணிர்
நினைவகம் நிறைந்ததாய் தோன்றும்
ஆனாலும் புதிய அனுபவங்கள் ஓயாது
சித்திரங்கள் தீட்டும்