காத்திருப்பு
கரையோரத்து மணல் மீது ஆறின் வலி
பூவின் இதழோரம் தென்றலின் காயம்
பனித்துளியில் அதிகாலை நிலவின் வெப்பம்
மழையும் காற்றுக்கும் இடையேயான வருடல்.
ஊமை வானம் என்னை சுற்றிலும்
சினம் தணிந்த சூரியன்
காத்திருப்பு இயல்பான தருணங்களாய்
வெளிச்சத்தை கடன் வாங்கிய நிலவு
இரவுக்காக காத்திருக்குமோ...