என் செல்லமே
செல்லமாகா நீ பேசி
செல்லச் செருக்கு நீ காட்டி என்
செல்ல மழையில் நீயும் உன்
மோக மழையில் நானும்
சின்னதாய் நனைந்து
என் செவ்விதழ் நீ கடித்து
செங்குருதி நான் துடைத்து
சிக்கன நீ இறுக்கி அணைத்து
வெட்கத்தில் நான் தடுக்க
செல்லத்தைச் செலவு செய்து
பொய்க் கோபத்தை நீ வரவழைக்க
வந்த கோபத்தை விரட்டி அடிக்க
எண்ணிக்கை இல்லா முத்தம்
நான் கொடுக்க
வந்த கோபம் தங்க இடம் இன்றி
தானாகவே பறக்க
செல்லம் உன் அரும்பு மீசை துடிக்க
அதை என் வேல் விழி நோக்க
நான் இமை முடித் தடுக்க
என் செல்லம் நீ வெல்லமடா
என்று நான் கதைக்க இடை
மறித்து நீயும் அது நீசுவைக்கவே
என்று பதில் உரைக்க
நான் என் முகம் திருப்பி பக்கவாட்டில்
பார்ப்பதாக பாவனை காட்ட
நீயும் என் மடி மீது தலை சாய்க்க
சாமக் கோழியும் தன் பங்குக்கு
விடியலை அழைக்க
நீயும் வீட்டுச் சேவல் மீது அளக்க
முடியாத அளவு வெறுப்பைக் கொட்டித் தீர்க்க
கணிரென நான் சிரிக்க மது உண்ட வண்டாக
நீயும் மயங்க
அப்பப்பா எத்தனை சொப்பனங்களடா
சின்ன விழி கண்ட கனவினிலே
செல்லமே என் செல்லமே இன்னுமா
நான் சொல்ல வேண்டும்.......