நீயும் ஆகலாம் சாதனையாளனாக
ஆகலாம் சாதனையாளனாக!
அனைவரும் சச்சினல்ல!
அனைவரும் பாரதியல்ல!
ஆனால்
அனைவரும் மானுடர்!
மாண்புறப் பிறந்தோர்!
நம் துறையில்
நம் சமூகத்தில்
நமது எச்சமும்
மிச்சம் இருக்க வேண்டாமா?
கொஞ்சம் படிப்பு - நிறைய அறிவு!
நிறைய அன்பு - ஒரே காதல்!
ஒரே மனைவி - ஒரே பிள்ளை!
ஒரே வாழ்க்கை - அது
முழுவதும் சாதனையால் நிறையட்டும்!
எதற்காக வேதனையால் நிறைக்க வேண்டும்!
முள் - காலில் தைக்காது!
நாம் அதனை மிதிக்கும் வரை!
வேலி- வழி விடாது!
நாம் அறுத்தெரியும் வரை!
இருள் - விலகவே விலகாது!
கண் திறக்கும் வரை!
மானிடா.........
ஊழலில் உழன்று போன மானிடா!
சற்று விழி திற!
செத்துக் கிடக்கும்
உன் இதயத்துக்கு
உயிர் கொடு!
சுருங்கிய உன் தசைகளுக்குள்
ரத்தம் பாய்ச்சு!
முடங்கிய உன் மூளைக்கு
திறப்பு விழா நடத்து!
நீயும் ஆகலாம் சாதனையாளனாக!
-------- சு.தா(நான்)