நாளைய பெண்கள்
நாளைய பெண்கள்
* தென்றலாய் இருப்பாள்
தத்தி தத்தி நடப்பாள்
கொஞ்சும் மொழி பேசி
கொண்டாடப்படுவாள்-- அவள் வீட்டில்
*ஒய்யாரமாய் இருப்பாள்
துப்புரவாய் செய்வாள்
துரிதமாய் முடிப்பாள்
துள்ளி துள்ளி நடப்பாள்--அலுவலகத்தில்
*சாதிக்க துடிப்பாள்
சமத்துவம் படைப்பாள்
பெண்மையை மதிப்பாள்
பெருமை பட திகழ்வாள் --சமுதாயத்தில்
* கண்ணியம் காப்பாள்
கடமை புரிவாள்
காதலும் செய்வாள்
காமுகனை கண்டால் --சவுக்கால் அடிப்பாள்
சிவ.ஜெயஸ்ரீ
_______________________________________________________________________
மார்ச் 8,2015 மகளிர் தின நல்வாழ்த்துக்கள் ....