பெண்கள் தினமாம் இன்று

பெண்கள் தினமாம்
இன்று
தொலைக்காட்சி பத்திரிகை
வலைத்தளங்கள் என
எல்லாமே சொன்னது
இதை
பெண்களின் சிறப்பு
பற்றிய அழகான
கவிகளும் கட்டுரைகளும்
நன்றாக தான்
இருக்கிறது வாசிக்கும்போது
பெண்ணாகிய எனக்கும்
என்னை போன்ற
பிற பூக்களுக்கும்
வாசித்து நகரும்
அடுத்த நிமிடங்களில்
கேட்கும் நிஜங்கள்
என்னமோ இதுதான் !
பெரிய பெண்கள்
தினமாம் இது ஒரு
தம்பியின் சீண்டல்
காபி கொண்டுவராம
என்ன கைபேசியை
நோண்டிக்கொண்டு
என கேள்வியோடு
நிற்கும் கணவன்
அடுப்பில் இருப்பதை
பார்ப்பதை விட்டுவிட்டு
என்ன பத்திரிகை
வேண்டியிருக்கு என
முனுமுணுக்கும் மாமியாரின்
சுடு சொற்கள்
என்ன குழம்பிது
என எரியும்
கணவனின் அலட்சியம்
அம்மா சமையல்
அப்படி இருக்கும்
என்ற வழக்கமான
வலியான வார்த்தை
தரும் ஏமாற்றம்
ஏதோ ஒரு பாராட்டு
ஏதோ ஒரு அங்கிகாரம்
ஏதோ ஒரு சின்ன புன்னகை
ஏதோ ஒரு அன்பு வார்த்தை
ஏதோ ஒரு ஆசை முகம்
ஏதோ ஒரு நேச நிழல்
ஏதோ ஒரு பாச மடி
இப்படி கிடைக்காமல்
ஏங்கிகொண்டு
எத்தனையோ பூக்கள்
உள்ளே வாடிக்கொண்டு
வெளியே உணர்ச்சிகளற்று!