என் உயிர் தோழிக்கு
எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
பள்ளி என்னும் சிறு கூட்டில்
என்னோடு வந்தவளே........
உன் நட்பு என்னும் அன்பில்
பாதியை எனக்கு தந்தவளே .....
சிறகொடிந்து நின்ற எனக்கு
சிறகாய் வந்தவளே.....
தோழி என்னும் சொல்லிற்கு
அர்த்தம் தந்தவளே....
உயிராய் வந்து என்
உயிர்தோழியாய் ஆனவளே ....
உனக்காக ஆண்டவனை வேண்டுகிறேன்
எனக்கு அடுத்த பிறவி
வேண்டுமென்று .....
அதில் நீ என் தோழியாய் அல்ல
தாயாய்.....!