தள மகிமை
காதல் சிவிகைகள்..
சிந்தனை உப்பரிகைகள்..
மிரட்டும் உயரங்கள்..
எழுத்தில் துயரங்கள் ..
இலக்கணத்தோடு விருந்துகள்..
மனோபலமேற்றும் மருந்துகள்..
சிற்சில ஒதுங்கல்கள்..
பற்பல பதுங்கல்கள்..
புன்னகைக்க கருத்துக்கள்
எண்ணவைக்கும் எழுத்துக்கள் ..
இத்தளத்தில் நட்புகள்
எல்லாமே அற்புதமே..
உய்யல்லா ..உய்யல்லா..
தொய்வில்லா இத் தமிழ்த்தளமே
தமிழ்த் தாயின் திருத்தலமே!