வாழீய பெண்மை
உன்னுள் ஆற்றலை உணர்ந்து-நீயும்
நடந்திடுவாய் தலை நிமிர்ந்து ...
வானமும் உந்தன் இலக்கு -உன்
மனத்திரையை கொஞ்சம் விலக்கு...
தரணியை ஆள்பவள் பெண்தான்-நம்
இல்லத்தின் கண் தான்...
மோகத்தை என்றும் தொலைத்து - சுய
திறமையினால் உனை உயர்த்து ,,,
சோதனையைக்கண்டு அஞ்சி
வேண்டாமே பயம் நெஞ்சில்
சாதனைகள் சொல்லும் செய்தி
அறிந்திடுவாய் என் தோழி ...
துறைகள் பலவும் சொந்தம்
முன்னேற்றத்தில் இல்லை மந்தம்....
உருகியே நிற்பாள்.... பாசம்
சீண்டி பார்த்தால்.... நாசம்
சட்டம் சொல்லுமே தீர்ப்பு - பெண்
என்று கொள் இறுமாப்பு ....
கல்வி தருமே வலிமை -அதுவே
உனக்கு வளமை..
உள்ளத்தில் வேண்டும் உறுதி - உன்
எண்ணத்திலும் தெளிவு...
திட்டம் ஊக்கம் செயல்திறன்
வெற்றிக்கு இவைதான் மூலதனம் ...