கருத்துக் குறட்பா ஓர் ஆய்வு
நம் இனிய கவி நண்பர்கள் கயல் விழி வெள்ளூர் ராஜா
கருத்துகளில் என் கருத்தினை குறள் வெண்பாக்களில் சொல்லியிருந்தேன்
அது தூய வெண்பாவாக நடக்கிறதா என்று பார்ப்போம்
சர் ஃபானின் கருத்தையே நிலை மண்டில ஆசிரியப்பாவாகத் தந்திருக்கிறேன்
அதையும் படிக்கவும்
கயல் விழிக்கு :
ஆஹா இதுவல் லவோரச னைஇது
வல்லவோ நல்ல கருத்து
வெள்ளூர் ராஜாவுக்கு :
வெள்ளூரார் நல்வரு கையிலே உள்ளமே
துள்ளுதே கன்றினைப் போல்
சர் ஃ பானின் கருத்தாலான கவிதை :
கவிமழையில் நனைந்தேன் நானும் மகிழ்ந்து
வருடல்களில் மூழ்கினேன் என்னை மறந்து
மலர் தோட்டத்தில் தென்றலாய் உலவினேன்
போய்நான் காட்சியை கண்டு வந்தேன்
வரிகளிதம் தமிழ்ச்சுவை அருமை அருமையே !
========================================================================
ஆஹா இதுவல் லவோரச னைஇது
நேர் நேர் நிரை நேர் நிரை நிரை நேர் நேர்
தேமா புளிமா கருவிளம் தேமா
வல்லவோ நல்ல கருத்து
நேர் நிரை நேர் நேர் நிரைபு ( பிறப்பு போல் )
கூவிளம் தேமா
ஈரசைச் சீரில் மா முன் நிரை விளம் முன் நேர் வர வேண்டும்
வந்திருக்கிறது
மூவசை சீரில் காய் முன் நேர் வரவேண்டும் இப்பாவில்
மூவசைச் சீர் இல்லை . கனிச் சீர் வெண்பாவில் வரக் கூடாது
குறட பா ஈரடி கொண்ட வெண்பா
முதலடி நாலு சீர் கொண்ட அளவடி
இரண்டாம் அடி அல்லது ஈற்றடி மூன்று சீர் கொண்ட சிந்தடி
சரி இருக்கிறது
ஈற்றுச்சீர் ஓரசை பிறப்பு என்பது போன்ற குற்றியலுகர அசை .
அமைந்திருக்கிறது
ஆஹா குறள் வெண்பா !
ஆர்வலர்கள் மற்ற பாக்களையும் ஆய்வு செய்யலாம்
------அன்புடன் பா நாடன் கவின் சாரலன்