ஈரம் தகர்ந்த சிறகால்

வாசல் விட்டு இறங்கி
வீசிவிட்டேன் வாட்டமெல்லாம்...
ஒற்றை வானோடு ஒருமித்து ஒரு கூக்குரல்...
கடவுளோடுடனான பேரம்
நிறுத்த பெற்று,
கையோடு கை கோர்த்து ஒரு கூகுரல்....
சுயம் என்று வளர்த்த பேதம் கழற்றி எறிந்து ஒரு கூக்குரல்...
இப்படிதான் என்ற விதி விலக்கி ஒரு கூக்குரல்...
எப்படியும் இனிதாய் என்று மாற்றி சூட்டி கொண்டு ஒரு கூக்குரல்....
வந்த வரபோகும் மனிதர்காள் கேளீர்,
செவி தீட்டி கேளிர்...
மீண்டும் புதிதாய் நான்....