பகுத்தறிவு மூடர்களே திருந்துங்கள் - உதயா

ஆறு அறிவுகளைக் கொண்டவர்கள்
அவர்களே அறிவாளி மனிதர்கள்
பகுத்தறிவைப் பரிசாய் பெற்ற
பாரில் வாழும் வித்தகர்கள்
ஈகையினை சிறைப் பிடித்த
மனித குல வள்ளல்கள்
தானத்தைப் புதைத்துவிட்ட
தரணியாளும் தர்மர்கள்
சாதிக்கும் ஜனனமளித்த
சாம்ராஜ்ய குருமார்கள்
மதங்களை பிரித்து வைத்து
மண்ணையாளும் கடவுள்கள்
ஈன்றவர்களை துரத்தி வாழும்
அன்பு படைத்த நெஞ்சர்கள்
துரோகத்தை முறையே பயிலும்
புத்திசாலி சீடர்கள்
பறவைகளும் தங்களுக்குள்
இனங்களை பார்ப்பதில்லை
உயிரினத்தின் உணர்வுகளை
அறியாமல் வாழ்வதில்லை
பசியென தவிக்கும் போது
ஐந்தறிவு ஜீவனும் உதவி வாழ
ஆறறிவு படைத்த மனிதனே
நீ அறியாமல் வாழலாமா ?
ஆறாம் அறிவாய் நீ
பெற்றிருப்பது பகுத்தறிவா ?
அரக்கனின் உணர்வை தூண்டும்
இரக்கமற்ற பகட்டரிவா ?
கொடுப்பதினால் செல்வம்
கொஞ்சம் குறைந்துப் போனாலும்
அன்பெனும் பொக்கிஷம்
உமக்கு கிடைக்காமல் போவதில்லை
உள்ளங்களின் மகிழ்வில்தான்
நாம் உலகின் வாழ்நாள் வரை
வினவபடுவோமென அறிந்துகொள்
அறியாமையிலிருந்து விழித்துகொள்