எதையும் மாத்திடாதீங்க சரியா

டெய்லர் கடையில் பெண் : "இந்தாங்க டெய்லர்.... அளவு பிளவுஸ்... இந்த பிளவுஸ் மாதிரியே கரெக்டாத் தச்சுடுங்க.. எதையும் மாத்திடாதீங்க. ஆனா, கொஞ்சம் சின்னச் சின்ன ஆல்ட்ரேஷன்ஸ் மட்டும் இருக்கு.. குறிச்சுக்கோங்க..

இதை விடக் கை நீளம் ஒரு கால் இன்ச் கூட்டி வைங்க.. ரொம்ப ஷார்ட்டா இருக்கு.. உடம்பு ஒரு அரை இன்ச் டைட் பண்ணுங்க. ரொம்ப லூஸா இருக்கு.

பின்னாடி கழுத்து ரொம்ப இறக்க வேண்டாம்.இதை விட ஒரு கால் இன்ச் மேலே வைங்க. இடுப்பு இறக்கம் இன்னும் கொஞ்சம் வேணும். ஷோல்டர் பக்கம் இறங்கி வருது. அதையும் சரி பண்ணுங்க .

அப்புறம்.. திரும்பவும் சொல்றேன் டெய்லர்... இந்த அளவு பிளவுஸ் மாதிரியே அப்படியே தைக்கணும் ...எதையும் மாத்திடாதீங்க.. சரியா...???

டெய்லர் : "ஙே.......

எழுதியவர் : முகநூல் (11-Mar-15, 6:19 am)
பார்வை : 185

சிறந்த நகைச்சுவைகள்

மேலே