மனித இருத்தலியல்

இடுகாட்டுத் தீயில்
இடப்பட்டத் தன்னுடலைப் பார்க்க
மனிதன் வந்தான்!

சூனியம் தேடி
சுழல்கின்ற உலகில்
சுதி சேர்த்து,தன் முன்னே
ஆடுகிறான் ஒராட்டம்!

மாயவலைகுள்ளே மங்கிட்ட
தன் வாழ்வையெண்ணி,பலர்
கண்முன்னே நீரோட்டம்!

ஏன் எவர்க்கும் புரியவில்லை?
இந்த மனித வாழ்க்கை
என்னும் கல்லாட்டம்!

ம்...
தன்னை தரம்பிரித்த
தரகர்கள் மத்தியில்,
நெருப்புழுதியில் மடிந்துக்கிடப்பதை
கேவலமாய் என்றெண்ணியோ,
அங்கே புறப்படத் துடிக்கிறான்!

ஐயோ!
சிறகொடிந்து பறக்கிறதே!

காலத்தை இன்னும்
சிலகாலம் சுமக்கின்ற
எவனோ புதியவனைத் தேடி,
அவன் சித்தாந்தம் பறக்கிறதே!

மானங்கெட்டவை!
மனிதன் வகுத்த,
சித்தாந்தம் அல்லவா?

கடைசியில்...
எல்லாம் புரிந்தவனாய்
நடையைக் கட்டினான்!

"ஒன்றுமில்லை!!"-என்று
உணர்ந்தவனாய்!

எழுதியவர் : பாரி இளஞ்செழியன் (11-Mar-15, 11:35 am)
பார்வை : 123

மேலே