கதறி கொண்டிருக்கும் என் விரல்கள்
கையில் தவழா காற்றுக்கு ஒரு
கவிதை
தீடிர்
சிந்தனையில் எழும் ஒருபொருட்பன்மொழியில்
ஒரு கவிதை
காதலுக்கு ஒன்று
நட்புக்கு ஒன்று
இதலாம் எதுகேன்று ஒன்று
தாகத்துக்கும் தாய்மைக்கும்
தவிப்புக்கும்
என
எழுத துடி துடி துடித்து
மனதிடம்
கதறி கொண்டிருக்கும்
என் விரல்கள்
செவி கொடுக்க வண்ணம்
மனதை கல்லாக்கி கொண்டு
கணினிக்கு
உயிர் கொடுக்க
மென்பொருளை
தட்டிக்கொண்டு இருக்கிறது.....