பொழுது விடிகிறது

தாயின் வற்றிய மார்பை
எவ்வளவு அழுத்திப் பார்த்தும் -வராத
பாலிற்கு அழும் பச்சிளங்குழந்தையின்
பசியின் மீதான கோபம்!

அவன் ஆண்மகன் அல்லான்
என்றே கோர்ட்டில்-மனைவி
சொல்லித் தூற்றிய அவனான
இயலாமையின் மீதான கோபம்!

அவள் பால்சுரப்பிகளை வளம்பெற
எண்ணி மாற்றான்-மடியைத்தேடி
ரோட்டில் செய்கை செய்யும்
கற்பின் மீதான கோபம்!

இப்படி எல்லோர் கோபமும்
தநிந்திட அந்த ''ஓர் இரவு''
அரணாய், ஆதாரமாய் இருந்தது!

இதில் ஏன் கதிரவனுக்கு மட்டும்
இத்தனை ஆதிக்க கோபம்!
பொழுது விடிகிறது!

எழுதியவர் : பாரி இளஞ்செழியன் (11-Mar-15, 10:55 am)
சேர்த்தது : pari elanchezhiyan V
பார்வை : 143

மேலே