அனைவரும் இப்படி தான்

தாய் மொழி தமிழ் என்பார்
தமிழில் பேசிவிட்டால்
தள்ளி நில் என்பார்.

ஒருவனுக்கு ஒருத்தி என்பார்
ஒதுக்குப் புறமாய் இன்னொருத்தி
வைப்பார் .

சாதிகள் இல்லை என்பார்
சாக்கடை எடுப்பவனே
தீண்டாதே தீட்டாகும் என்பார்.

கற்பு பெண்ணுக்கு கண்ணாகும் என்பார்
கண்ணை கடையில் வைத்தே விற்பார் .

அன்னையை வணங்கு என்று
அறிவுரை சொல்வார்
தன் அன்னையை அனாதையாய்
வீதியில் விடுவர் .

உயிர் காப்போம் நாம் என்று
ஊருக்குள் சொல்வார்
ஒரு ஊசிக்கு இவளவு என
கணக்கிட்டு கொள்வார் .

ஊருக்கு உபதேசம் உரைக்கின்றேன் நான்.
உள்ளுக்குள் அனைவரும் இப்படி தான் .!!

எழுதியவர் : கயல்விழி (12-Mar-15, 7:46 pm)
பார்வை : 183

மேலே