கோட்டோவிய மழலைகள் - 6
என் மழலை மகளின் கேள்விகள் :
கூடிவாழும் காகங்களும்
நன்றி மறவா நாய்களும்
மனிதனுக்கு பாடம் கற்பித்தால்
அவைகளுக்கு என்ன பாடம்
கற்பிக்கிறான் மனிதன் ?
நீலவானின் நிறம் பகரும்
நீலக் கடல் என்றால்
நமது ஊர் ஆறு கருப்பென்று
ஆனதெப்படி சொல்லுங்கள் ?
சேர சோழ பாண்டியரின்
பரம்பரைகள் தெரியும்போது
உங்கள் தாத்தாவின் அப்பா
பேர் ஏனப்பா தெரியாது ?
ஜாதிகள் இரண்டொழிய
வேறில்லை சொன்னீர்கள் !
ஆனால் ஜாதி என்றால்
என்னவென்று சொல்லவில்லையே?
இப்பொழுது என் மகள்
வீட்டின் வெளியே மரத்தடியில்
வெளியுடன் பேசிக்கொண்டு ........
வெளி விசாலாமான விஷயங்களின் விலாசம் !!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
