என்னவளே

(இக்கவிதை மனைவியை பிரிந்த கணவனுக்காக)

தூங்காத கண்ணுக்குள் தூரி ஒன்று ஆடுது,
நீங்காத எண்ணத்தில் நிலைக்கொண்டாடுது.
அரியாத உள்ளத்தில் துரியாத ஆசையடி,
அலைபாய விட்டது ஆண்டவனின் வேசமடி...

இருமாலை சூடி இணைந்ததொரு பந்தம் – அதில்
ஒருமாலை உதிர்ந்து விழ துடிக்குதடி நெஞ்சம்.
நாம் நிரைந்திருந்தால் வாழ்ந்திருப்போம் பல காலமடி...
நீ இல்லாத நான் நிலத்தின் மேலே பாரமடி.

உனக்கென்று போட்டு வைத்தான் - இறைவன்
ஒற்றையடி பாதை,...
என்னை உயிரோடு விட்டுவிட்டான் - நான்
தேடுகிறேன் அந்த நாளை.

காலத்தின் கட்டத்தில் காத்திருக்கிறேன் – அதில்
கண்ணீர்ப்பூ பூத்திருக்க வாழ்ந்திருக்கிறேன்.
இருவரும் வாழ்ந்திருந்தோம் பல திங்கள் மட்டும் – அந்த
நினைவுகளோடு தொடர்ந்திடுவேன் என் காலம் முற்றும்.
(கொடிசிவம்)

எழுதியவர் : கொடிசிவம் (12-Mar-15, 9:01 pm)
சேர்த்தது : prathish.p
Tanglish : ennavale
பார்வை : 85

மேலே