ஆபாசம்-கடவுள்-ரசனை

சுவரைத் தின்று விட்ட
கழுதைகளின்
சுவரொட்டியை
விடியலில்
கொண்டு சென்றான்
முதலில் கண்டவன்......
-------------------------------------------
வானம் வசப்பட்ட
பறவை
வேடனுக்கு குறி வைத்து
கொடுத்தது
ரசனையை....
-------------------------------------------
பாவம் போக்க
பலியிடப்பட்டது
ஆடு.....
துடிப்பு அடங்கும் வரை
பாவமாய்
பார்த்துக் கொண்டிருந்தார்
கடவுள்......
-----------------------------------------------
கவிஜி