யாரங்கே-இந்த புலவனைச் சிறையிலிடுங்கள்

அப்பால் சிறிது நடந்து
அண்ணாந்து பார்த்தேன்
ஆகாயம்
அரவமழை பொழிந்தது.

சுவட்டு கீறலில்
செத்த எலிகள்
பதிந்த காலடிகளில்
பரந்தாமனைக் கண்டன.

செவிட்டு வாத்தியாருக்கு
அவரின் வார்த்தைகள் தேட
அவருக்கோர்
ஆடி (கண்ணாடி)தேவைப்பட்டது.

கோப்பும் நுரையுமாக
காண்பவரை வசீகரித்ததில்
கரையெங்கும்
கணக்கில் வராத உயிர்த் துளிகள்.

நவீனமாய் இருக்குமென்று
நேற்றுவந்த புலவன்
தந்தைக்கும் அத்தைக்கும்
முடிச்சு போட்டான் .
சமுத்திரம் குட்டையாகவும்
குட்டை சமுத்திரமாகவும்
அவன் கண்களுக்குத் தெரிந்தது ..

நல்லவேளை -
மனிதன்
முப்பது கோடி கிலோவிலிருந்து
முப்பத்தாறாயிரம் கோடி
கிலோவாக மாறிய போதும்
நிலம் மட்டும் மாறாமல்
அவனைத் தாங்கியது.

எழுதியவர் : சுசீந்திரன். (12-Mar-15, 7:31 pm)
பார்வை : 103

மேலே