சிட்டுக் குருவியும் மனிதனும்
சிட்டுக் குருவிகள்
சின்னசின்ன சிறகடித்து
வண்ண மலர்களின் மேல்
வாகாய் அமர்ந்து வயிறார
தேன் அருந்தி கீச் என்று
ராகத்துடன் பறந்து செல்ல
மலர் அருகில் வண்டு வந்து
தேன் அருந்த தேன் இல்லையே
என மனம் வாடி வண்டு மீண்டும்
வேறு மலர் தாவும் விதம்
நம் கண்களுக்கு இதம் அளிக்கிறது
சிட்டுக் குருவியின் கெட்டித் தனம்
அது பறக்கும் வேகமும்
அது தேனை உண்ணும் அழகும்
அதன் குட்டி உடலும் குட்டி வயிறும்
பார்க்க அழகு தான்
உலரப் போடும் துணிகளில்
பூக்கள் பதிந்திருந்தால்
அதனையும் விட்டு விடாது
அந்தப் பூக்களிலும் தேன் அருந்த
அமர்ந்து விடும் அழகு
அதனால் ஏமாற்றம் அடையும்
சிட்டுக் குருவியின் அற்ப ஆசை
நம்மை இரக்கப் பட வைக்கும்
இறைவன் இந்த சிறிய குருவிக்கே
இத்தனை ஆற்றலைக் கொடுத்திருக்கிறார்
மனிதர் நமக்கு எவ்வளவு
அளவற்ற ஆற்றலைத் தந்திருப்பார்
நாம் மனிதர்
இறைவன் படைப்பு அத்தனையும்
நமக்கே உரியது திருப்தி கொள் மனிதா
மனிதனாக பிறக்க நாம் என்ன
தவம் செய்து வந்தோம்
உன்னை படைத்ததில்
இறைவன் திருப்தி கொண்டான்
நீ எதில் திருப்தி கண்டாய்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
