நாங்கள் கொடுத்து வைத்தவர்கள்

என் எண்ணத்தை என்னவென்று சொல்வது.
கொட்டித் தீர்க்க இது தான் சரியான தருணம்.
தொடக்கத்தில் நீந்த தெரியாமலே எழுத்து தள கடலில் குதித்தேன்..
உப்பு தண்ணீர் நிறைய குடித்திருந்தாலும்
சிலர் எனக்கு நீந்த பழக்கி விட்டு நல்ல தண்ணீர் பாதையை காட்டினார்கள்..!!

எதையும் யோசித்து இதை எழுத தொடங்கவில்லை,
கிறுக்கல் தான் உண்மையாக இருக்குமென
எனக்கொரு மூடநம்பிக்கை..!!

மனம் திறந்து பாராட்ட நல்ல மணம் கொண்ட மனம் வேண்டும் ,
அத்தனை பெரிய உயரத்தில் இருக்கும் அவர்கள் கீழே கிடக்கும் என்னை போன்றவர்களை மேலே தூக்கி விடுகிறார்கள்..!!

அவர்கள் ஒன்றும் சாதாரணமானவர்கள் அல்லர்,
எழுத்தின் தலையில் உட்கார்ந்து சிலை வசிப்பவர்கள்,
கவிதைகளுக்குள் தவம் இருப்பவர்கள்,
நிதர்சனங்களையும்,விமர்சனங்களையும்
ஒருங்கே கடந்த அறம் துறவா புலவர்கள்..!!
இந்த வர்ணிப்புகளை கண்டு கூச்சப்பட கூடிய எளியவர்கள்..!!

எங்கோ எப்போதோ கேட்டிருக்கிறேன்,
நல்ல இதயங்களின் முகம் வெளியில் தெரியாது அப்படி தான் இவர்களும்..
இவர்களுக்கு ஒப்பாக மேற்கோள்
எதையும் காட்ட விரும்பவில்லை ..!!

இவர்களை கடவுளாக்கி
இறை நம்பிக்கை துறந்த என்
நம்பிக்கையை கைவிட மாட்டேன்..!!
அவர்கள் அப்பாற்பட்டவர்கள்..!!

புகழ்வதற்காக மட்டுமே இதை சொல்லவில்லை
இதுவும் அவர்களுக்கு பிடிக்காது..
எல்லா நண்பர்களின் சார்பாகவும் இதை
சொல்கிறேன்..!!

அவர்கள் பற்றி தெரிந்து கொண்டதில் புரிந்தது யாரும் எளிதாக மேலே வரவில்லை,
முட்டி முட்டி உச்சம் தொட்டவர்கள்,
முன்மாதிரியாக இருப்பவர்கள்..!!

கவிதை எனக்கு என்ன கொடுத்ததோ,
கொடுக்க போகிறதோ தெரியவில்லை,
ஆனால் நல்ல மனிதர்கள் இவர்களை அறிமுகம் செய்தது..!!

என் உணர்ச்சிவசங்களை மாலையாக்கி
தர வேண்டும்,
சந்தோச கண்ணீரில் அவர்களை
தழுதழுக்க செய்ய வேண்டும்,
அழுதால் அது அதிகப்பிரசங்கித்தனம்,
மகிழ்ந்து சிரித்து இருந்தால் அது திமிரு
எப்படி தான் அவர்களுக்கு நன்றி சொல்ல

யார் தான் அவர்கள்,
அறிமுகம் தேவையில்லாத முகங்கள்,
எழுத்து தளத்தின் ஆக்ஸிஜன் மரங்கள்,

அந்த நல்ல பெயர்களை கூறி கர்வமடைகிறேன்,
ஓங்கி சொல்லி ஆர்ப்பரிக்கிறேன்,
ஆரவாரம் செய்து அடங்குகிறேன்..!!

1.அண்ணா.ராம் வசந்த்
2.அண்ணா.ஜின்னா
3.சார் .ராஜன் .G
4.சார் .கருணாநிதி
5.சார் .பொள்ளாச்சி அபி
6.அண்ணா.குமரேசன் கிருஷ்ணன்
7.அண்ணா.சரவணன்

குறிப்பிட்டு இவர்களை சொல்ல காரணமிருக்கிறது,
எழுத்து தளத்தில் நன்கு உலா வருபவர்களுக்கு
இது புரியும்..!!

தோன்றியதை திருத்தம் செய்யாமல் எழுதி விட்டேன்.
உங்களால் நாங்கள் கொடுத்து
வைத்தவர்கள் தான் ..

இப்போது நிறைவாக உணர்கிறேன்..!!
நன்றி

எழுதியவர் : மனோ ரெட் (13-Mar-15, 6:35 am)
பார்வை : 243

மேலே