சட்டை சாப்பிட்டது

சட்டை சாப்பிட்டது...!

நான்
முதல்முதலாக
சட்டை சாப்பிட்டதை பார்த்தேன்..!

ஆம்
ஒரு குழந்தை
முதல்முதலாக
சாப்பிட ஆரம்பித்தபோது...

அதன்
கை முதலில் சாப்பிட்டது
காலும் கொஞ்சம் சாப்பிட்டது
முகம் முழுவதும் பொதுவாய் சாப்பிட்டது
வாய் எப்பவாவது சாப்பிட்டது

அனைத்தையும்
ரசித்துக்கொண்டிருந்த
சட்டையும் சாப்பிட்டது..!

இதனை
பசியுடன்
பார்த்துக்கொண்டிருந்த எனக்கு
வயிறும் மனதும்
முழுதாய் நிரம்பியது...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (13-Mar-15, 8:11 am)
பார்வை : 445

மேலே