நேருக்கு நேர்
உங்களை யாரேனும்
அரைகுறை எனச் சொன்னால்
கற்றுக்கொண்டிருக்கும் வளர்பிறை
நானென பதிலுரைத்திடுங்கள்.
நீங்கள் அதிகம் பேசினால்
சில்லைறையென்றே கேளி செய்திடுவார்.
ஆம் தவறவிடுகயில் நாணயமே
உடனே கவனம் ஈர்க்குமென
நாணச்செய்திடுங்கள்.
கழித்தலில் கூட
கடன்வாங்கு என்பீர்.
அது உன்னுரிமை
விடை தேவையெனில்
எடுத்துக்கொள் என்று
எழுந்து நில்லுங்கள்
இனியேனும்.
மின்சாரத்தின் பலம்
எதுவெனக் கேட்டால்
எதிர்மறை என்றே
சிந்திக்க வையுங்கள்.
தலைவனாக ஆசையிருந்தால்
எந்த மொழியிலும் கற்றுக்கொள்ளுங்கள்.ஆனால்
மக்கள் மொழியில் பேசுங்கள்.
தத்தித் தவழும் பொழுதே
நடக்க எத்தனித்தவர்கள் தானே
நாமெல்லாம்.
வாழ்க்கையை ஏன்
சலித்துக்கொள்ள வேண்டும்..
--கனா காண்பவன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
