காலை வணக்கம் தோழா

செவ்வானம் சிறகடிக்க!
செதில் செதிலாய் மனம் துடிக்க!
மல்லிகையும் மலர்ந்திங்கு மண்வாசனையுடன் மனம் சேர்க்க !
குயில் பாடும் பாட்டுக்கு சேவல் சுதி சேர்க்க!
இரவும் கண்மூடி உறங்க சென்றதோ?
கதிரவனைக் கண்டு பதுங்கிக் கொண்டதோ?
துன்பமும் மறஞ்சாச்சு,புதுவிடியல் பொறந்தாச்சு!
போனது போயாச்சு! நாளொன்று நமதாச்சு !

எழுதியவர் : விஜயகுமார் ஜெயராமன் (13-Mar-15, 8:48 pm)
பார்வை : 293

மேலே