இன்றும் பிறந்தநாள் - பூவிதழ்

இன்றும் உங்களுக்கு பிறந்தநாளா ஓ
தேவதைகளுக்கு தினமும் பிறந்தநாளோ !
நீங்கள் தேவதையா என்று எனக்கு தெரியாது
பக்கத்துவீட்டு அத்தையாய் மட்டுமே தெரியும்
நீ நட்சத்திரமா நிலவோ தெரியாது
ஆனால் என் தொடுவானம் நீ
நீ புனித ரத்தமோ புதிய ஏற்பாடோ
எதுவும் தெரியாது இந்த அழுக்குபையனுக்கு
மொட்டென்று சொல்லி
உன்னை வாடவிடமாட்டேன்
நான் கிறுக்கிய வரிகளை
கவிதையாய் வாசித்த ஆசிரியை நீ
உனக்கு பொய் சொல்ல தெரியும்
அதனால் கவிதை எழுது
என்று உண்மையை சொன்னாய்
என் மொக்கை கவிதைக்கும்
முகம் சுளிக்காமல் சிரிக்க
உன்னால் மட்டுமே முடியும்
இப்படியும் வாழ்த்தலாமா
அதுவும் தெரியாது எனக்கு
வாழ்த்துக்குள் உன் வாழ்வை
சுருக்கிட விரும்பவில்லை
உன் போல் இரு யுகங்களாய் !

எழுதியவர் : பூவிதழ் (14-Mar-15, 12:39 pm)
சேர்த்தது : பூவிதழ்
பார்வை : 2418

மேலே