இல்லை

வாழ்க வளமுடன் என்று
ஒருநாளும் சொல்லியது இல்லை ....

வாழ்வை பற்றிய கவலையில்லை
பிறரை பற்றிய பயமுமில்லை .....

இருவரும் உண்போம் என்ற
வார்த்தை இந்நாள்வரை எட்டவில்லை ...

பகிர்ந்து உண்ணும் பழக்கமில்லை
பக்கத்தில் அமரும் நாட்டமில்லை....

நான் பேசும் வார்த்தையின்
அர்த்தம் எனக்கே புரிவதில்லை ...

கோபம் காண பொழுதில்லை
திட்டு வாங்காத தினமில்லை ...

என்விழியின் ஈரம் உன்விழியும்
நிறைக்கும் அதிசயம் ஏன் ??

நட்பெனும் சொல்லை தவிற
சொல்ல எதுவுமில்லை நம்மில்.....

எழுதியவர் : வீரா ஓவியா (16-Mar-15, 3:05 pm)
Tanglish : illai
பார்வை : 121

மேலே