அன்னையர் தினம்

அன்னை இன்றி பிறப்பு இல்லை
எவர் ருக்கும் அவளின்றி தெய்வமில்லை
முழு அகிலத்திட்கும் அன்போடு பாசமும்
சேர்த்தே வளர்ப்பவள் அன்னை
அயராது தளராது நம்மை ஆளாக்கும் அன்னை

விழிகளுக்கு இனம் போல் காத்திடுவாள்
விழுது கல் நமக்கு வாழ்வின் ஆணி வேர் அவள்
நம் பசி பூக்கிட அவள் பசி துறந்திடுவாள்
நம் நலன் காத்திடவே நாளும் உழைத்திடுவாள்

தன்னை வருத்தி நம்மை உயர்த்தி அழகு பார்ப்பவள்
தன்னலம் இல்லா நிகரில்லா இமயம் அவள்
பாரமாக நினைத்திட்டு ஓரமாய் ஒதுக்கினாலும்
பாசம் குறையாது வாழ்ந்திடும் இதய அன்னை

அன்னையின் அரவணை ப்பு தென் ராலின் சுகம்
அன்னையின் அன்பே ஆஸ்கார் விருது நமக்கு
அன்னை யைத்தொழுது நாளைத் தொடங்கிடுங்கள்
அன்னையின் மடியே இன்பத்தின் இமயம் நமக்கு

வயோதிபம் ஆனதால் வளர்த்திட்ட அன்னையை
முதியோர் இல்லம் தேடி முன்னின்று அனுப்புவர்
தள்ளியே வைத்தாலும் தானாகவே சென்றாலும்
தாயுள்ளம் மாறாது வாழ்த்திடுமே பிள்ளைகளை

தாரம் வந்தவுடன் தாயை மறந்திடும் சேய்கள்
ஈடேது இணையேது இவ் உலகில் அன்னைக்கு
கலங்காமல் காத்திடுங்கள் நிலையாய் தாயை
வணங்கிடுங்கள் அன்னையை நாம் வாழும் வரை.

எழுதியவர் : புரந்தர (10-Mar-15, 6:29 pm)
Tanglish : annaiyar thinam
பார்வை : 154

மேலே