பிரிக்க முடியாத ஒன்றானது
சாலையாகினும் பாலையாகினும்
பகலாயினும் இரவாயினும்
தனிமைக்குத் துணை இன்று ....
உறவானாலும் நட்பானாலும்
பிரிவானாலும் வரவானாலும்
இணைந்தே இருப்பது இன்று ....
பருவநிலைகள் மாறினாலும்
எப்பருவத்தினர் ஆனாலும்
நண்பனாய் இருப்பது இன்று ....
அவசரம் ஆபத்து நேரங்களிலும்
அமைதியாய் காலம் கழிக்கவும்
உதவியாய் இருப்பது இன்று ...
அறிந்திடா அரிய தகவல்களும்
அவசிய ஆதாரபூர்வ காட்சிகளும்
காணலாம் இதன்மூலம் இன்று ...
காதலர்கள் எளிதில் சந்திக்கவும்
காணொளியாய் கண்டு பேசிடவும்
உதவிடும் பொருளாய் இன்று ...
சோகமிகு நேரத்தை மாற்றிடவும்
களிப்புமிகு நொடியை பகிர்ந்திடவும்
உடனுள்ள கருவியாய் இன்று ...
உடனடியாய் உலகின் நிகழ்வுகள்
உள்ளங்கை திரை மூலமாக
கண்டிட உதவிடும் இன்று ...
அறிவைத் தூண்டிடும் காட்சிகள்
தவறான பாதைக்கு செல்லவும்
கருவியாக உள்ளது இன்று ...
அலைபேசி அவசியம் என்றாலும்
தொல்லையும் பல நேரங்களில்
உறவாகவும் மாறியது இன்று ...
பயனாகவும் உள்ளது பலருக்கு
பாதகமாக உள்ளது சிலருக்கு
பிரிக்க முடியாத ஒன்றானது ....
அலைபேசி என்பது அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது இன்று
பழனி குமார்