GOOD MORNING குறள்

பாலைத் தழுவும்இம் மேலைப் பொடியழகி
காலைச் சுவைக்கோப்பை யாய்

கோப்பையில் ஆவி குவிந்த இதழ்ச்சுவை
நாளிதழு டன்நல் விருந்து

விருந்தென ஏந்தியே வந்தனள் கோப்பையை
மூடிவிட்டேன் புத்தகத் தை
-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Mar-15, 9:53 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 322

மேலே