உனக்கு தெரியுமா

என் மகளே
உனக்கு தெரியுமா ?
மழலை பருவத்தில் என்
மனம் விரும்பியபடி உன்னை
அலங்கரித்து அழகு பார்த்து ...
உன் இதழ்கள் உச்சரிக்க
ஆரம்பித்தபின் கேட்டதை
முடிந்தவரை முடியாதென
சொல்லாமல் வாங்கி கொடுத்து
உன் விழிகளை கலங்கவிடாத
உறவொன்று வேண்டுமெனத்தேடி
ஆனந்தம் அழுகை கலந்த மனதோடு
கரம் மாற்றி கைபிடித்து கொடுத்து ...
நீ கருசுமந்த பத்தாம் மாதம்
மருத்துவமனையில்
பூமிக்கு வந்த புதுசொந்தம்
கையேந்திய போதுதான் ...
தாயுமானவனாய் எனை
உணர்ந்து நான்
முழுமையடைந்தேன் என்று !!