தலைப்பு இல்லை - சந்தோஷ்
குறும்பாக்கள்
----------------------
ஜனநாயகத்தின் பம்பர் பரிசு.
தாலி வேண்டுமா வேண்டாமா?
விவாதிப்பதற்கு முன்னரே
அறுக்கப்பட்டது
கருத்துரிமையின் தாலி.
-------------------------------------------
திருட்டு வி.சி.டி தயாரித்தும்
சிக்கவில்லை பி.பி.சி
அவமானப்படலமானது
ஆவணப்படம்.
-------------------------------------------
தன் குடிமகனின் வியர்வையை
சுத்தமாய் துடைக்கிறது
தமிழக அரசு மதுபானக்கடை.
-------------------------------------------
”வலிக்கிறது என்னை விட்டுவிடு “
மன்றாடுகிறார் காந்தி
இந்திய ரூபாய் தாளிடம்.
-------------------------------------------
வன்கொடுமை வழக்குகளில்
முந்தானைத் தலைப்பு தேடுகிறாள்
நீதி தேவதை.
இது எதிர்கால விபரீதம்.
-------------------------------------------
-இரா.சந்தோஷ் குமார்.