இனி ஒரு விதி செய்வோம் - உதயா

அரசியலெனும் வார்த்தைக்கு
சாக்கடையென பொருளை
அகராதியில் திருத்தியது யார் ?
சாக்கடையாக்கியது யார் ?

பேட்டிகளில் வெடிக்கிறது
முழக்கம் நல்ல அரசியல்வாதிகள்
நாட்டில் எவரும் இல்லையென

கொந்தளித்து பேசியவனே மறுநாளில்
அரசியல்வாதிகளின் பிரச்சாரத்தில்
முதல் தொண்டனாய் நிற்கிறான்

இருநூறூ ரூபாய்க்கும்
ஒரு பார்சல் பிரியாணிக்கும்
ஒரு பாட்டில் மதுவிற்கும்

நீர் தேங்க தேங்க தான்
குளம் சாக்கடையாகிறது
நீர் தேங்க அனுமதித்தது
யார் ? யார் ? யார் ?

நல்ல நோக்கம் உள்ளவனாயென
பார்த்து ஓட்டுபோடுவதில்லை
நிறையா நோட்டு கொடுப்பவனாயென
பார்த்தே ஓட்டு போடுவது

செய்வதெல்லாம் செய்துவிட்டு
இலஞ்சம் ஊழல் பெருகிவிட்டதுயென
யோகியன் போல குரலை உயர்த்தி
தொண்டை நீர் வற்ற பேசுவது

பணத்தினை கொடுத்து ஆசைக்காட்டிவிட்டாய்
நீ கொடுத்தால் வாங்கிக்கொள்கிறான் இலஞ்சமாக
நீ கொடுக்காவிடில் எடுத்துக்கொள்கிறான் ஊழலாக
இதனை பழக்கப்படுத்தியது யார் ?

இங்கு தலைவன் சரியில்லையென
சொல்பவனுக்கு தலைவனாக விருப்பமில்லை
ஒருவேளை தலைவனானால்
நல்லவனாய் வாழ ஆசையில்லை

சமூகத்தின் மீது இளைஞ்சனுக்கு
அக்கறை இல்லை
அக்கறைக் கொண்ட இளைஞ்சனுக்கு
சமுதாயம் துணை நிற்பதே இல்லை

அநீதிகளுக்கு தீர்ப்பு
அழுகைகள் மட்டுமே
இந்நிலை மாற வேண்டும்
அநீதிகள் புதைக்கப்பட வேண்டும்

சாக்கடையின் மணம் மாறவேண்டும்
சந்தன மணம் வீசவேண்டும்
சான்றோர் வாக்கு பலிக்கவேண்டும்
சமுதாயத்தில் ஒற்றுமை வளரவேண்டும்

மாற்றம் என்பது நிலையானது
மக்கள் நினைத்தால் அதுயின்றே உறுதியானது
வீணாய் பேசியதெல்லாம் போதும்
ஒற்றுமை மட்டும் வளர்ந்தால் போதும்

தலைவன் என்பவன் யாரோயில்லை
நாம்தான்யென்பது மக்களுக்கு நினைவுமில்லை
சேவகனுக்கு தலைவனென பெயர்சூட்டியது
நாம்தான்யென்பது மக்களுக்கு நினைவுமில்லை

இலஞ்சம் இனி நஞ்சாக வேண்டும்
ஊழல் விஷமென உறுதியாக வேண்டும்
இவைகளை பருக நினைப்பவனுக்கு
மரணமென்பது சட்டமாக வேண்டும்

அரசியல் மன்றங்கள் மரணிக்க வேண்டும்
அகிம்சை மன்றங்கலாய் மாற வேண்டும்
அகிலமே இதனை உணரவேண்டும்
ஆனந்த தீபம் அரசியலாக வேண்டும்

எழுதியவர் : udayakumar (15-Mar-15, 12:40 pm)
பார்வை : 843

மேலே