வெற்றி உனக்கே
எதுவும் நடக்கலாம்!
எதுவும் நம் கையில் இல்லை!
எத்தனை நாம் முயன்றும்
தோற்றும் போகலாம்!
முதலையின் வாயில் அகப்பட்ட
மீனாய் வெளிவந்து உயிர் பிழைக்கலாம்!
நம் முயற்சி,
இறைவனின் சித்தம்,
சுற்றம்,நட்பு
செய்யும் உதவிகள்,
அதிர்ஷ்டம்,
பணபலம்
இத்தனைக்குப் பிறகு
நம் பக்கம் நியாயமும்
இருந்தால்
நிச்சயம் வெற்றி பெறுவோம்!
வெற்றி என்பது
வல்லவருக்கும்,
நல்லவருக்கும்
பொருட்டல்ல!
முயற்சி நாம் செய்வோம்!
முடிந்ததை இறைவன் செய்வான்!
என்றாவது வெற்றி உன் கையில்!