சோதனைகளும் சாதனைகளாகும்
அடர்ந்த காட்டினில்
எங்கும் ஒரே மாதிரி
முகம் கொண்ட மரங்களின்
மத்தியில் தனியாய்
இனம் பிரிந்த மானாய்
இடரில் நீ தவிக்கும் போது
உன் கல்லூரியில் கற்ற
படிப்பறிவு பயன்படாது!
படிப்பறிவுடன் நீ
பட்டறிவைச் சேர்த்து
முயற்சித்துப் பார்!
எங்கிருந்தும்
ஒரு ஒளி கிடைக்கும்!
வழி வரும்!
வெறும் வாயில்
வடை சுடுவது அல்ல
வாழ்க்கை!
ஒவ்வொரு கணமும்
இடர்களை
இடம் பெயர்த்திடு!
இதற்கான வேலையை
செய்கின்ற போது
உன் கை
விலங்குகள் அறுபடும்!
தடைகள் தூளாகும்!
சோதனைகள் எல்லாம்
சாதனைகளாக மாறிடும்!