விடியல் வாழ்க்கை

நான் எங்கோ பிறந்தேன் நீ எங்கோ பிறந்தாய்
நாம் இன்று வாழ்வது நாடோடி வாழ்க்கை
காதலுக்கு தடையும் இல்லை சொல்வதற்கு உறவும் இல்லை
பிளைப்பதற்கு உடலும் உயிரும் நம்மிடம் உண்டு
புலப்புத்தேடி வந்த இடத்தில் அனைத்துக் கொள்ளும் உறவு அதிகம்
குடிலும்,கூலும்,உழைப்பிற்கேற்ற பணமும் கொடுத்து ஒளிரச் செய்த வேந்தன் ஒருவன்
உன்னை நான் மறப்பேனா
வாழை மரத்தின் வேர்கள் சாயும் இனி இந்த ஆலமரத்தின் வேர்கள் சாயாது
காதல் அழகின் அரும்பாய் பிறந்தாள் எந்தன் மகளும் இவ்வுலகில்
வெள்ளிக் கொலுசும் செய்து போட விடிய விடிய உழைத்தேனே
இன்று வீடும் ஒன்று கட்டிவிட்டேனே
காடும் ஒன்று பிடித்துவிட்டேனே
இவ்வூருக்குள்ளே நானும் ஒரு பெயர் சொல்லும் மனிதனானேன்.

எழுதியவர் : ஆ.சத்தியபிரபு (20-Mar-15, 9:44 pm)
Tanglish : vidiyal vaazhkkai
பார்வை : 128

மேலே