பெரிய கவிஞன் ஆக போறேன்டி

மனசக் குத்தும் நெருஞ்சி முள்ளா
உன் மீனு கண்ணு
பாயுதடி .....

பறிக்க ஆளில்லா பூவா
உன் ரோஜா இதழ்
சிரிக்குதடி .....

உன் கன்னக்குழியில் குடியேற
என் மீசை தினம்
துடிக்குதடி ....

விண்மீன் விதைல முளைச்ச
முல்லைபூ ஒண்ணு உன் முக்குத்தியா
மின்னுதடி ....

காத்துலஅசையும் கனகம்பரமா
உன் கம்மல் ரெண்டும்
ஆடுதடி ....

நாத்து நட நாதியத்த சேத்து நிலம்
நான், உன் பார்வையால பூத்துக்
குலுங்கும் சோலை ஆனேன்டி,.....

கவிதையும் தெரியாது, ஒரு கருமமும்
தெரியாது, உன்னை பத்தி எழுதி மட்டும்
பெரிய கவிஞன் ஆக போறேன்டி.......

எழுதியவர் : இளையநிலா (12-Mar-15, 10:46 pm)
பார்வை : 218

மேலே