தோல்வி

தோல்வி

சாகும் கற்பூரம் எரிந்தால் என்ன
துடிக்கும் மனம் அழுதால் என்ன

மனதின் பாரம் குறைந்தால் என்ன
வாழ்கையின் தூரம் அறிந்தால் என்ன

நிலவின் வெளிச்சம் படர்ந்தாள் என்ன
பூவின் வாசம் முகர்ந்தால் என்ன

மூச்சின் விலாசம் தெரிந்தால் என்ன
காற்றின் கைவசம் சேர்ந்தால் என்ன

மொட்டுக்களின் நேரம் அடர்ந்தால் என்ன
முட்களின் காரம் தொலைந்தால் என்ன

புன்னகையின் நிமிடம் மலர்ந்தால் என்ன
சிரிப்பின் வேகம் கண்கள் உணர்ந்தாள் என்ன

தோல்வியின் நேரம் கரைந்தால் என்ன
வெற்றியின் பாடம் கற்றால் என்ன

பாடலின் கீதம் திறந்தாள் என்ன
சாவியின் நுட்பம் கண்டால் என்ன

வாழ்கையின் பயணம் தொடர்ந்தாள் என்ன
பயணத்தின் இடையில் இடைவெளி வந்தால் என்ன

மனிதனே நீ அழுதுதானே
பாதம் பதித்தாய்

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (15-Mar-15, 12:45 pm)
Tanglish : tholvi
பார்வை : 137

மேலே