வாழ்வின் அர்த்தங்கள்
எனது நிழல்
எனது அருகாமை
எனது அரவணைப்பு
எனது அன்பு நோக்கி
வேர் பிடித்து நீர் தேடும் உன்
உறவுக்காக - அதிகாலை
நடையில் தொடங்குகிறது
எனது விடியல்.
குலைந்து ஒலிக்கும் குரலில்
இறுகிக் கருத மனங்கள்
விரிந்து இனிக்கும் கனியான
மாயம் கண்டு - துள்ளிக் குதித்தோடும்
வெள்ளப்பெருக்காகிறது
எனது - உழைப்பின் எஞ்சிய
கணங்கள்.
காமம், குரோதம், வஞ்சம்
களைந்து காதலை மட்டுமே
அணிந்துலவும் - உனக்குள்
கலக்கையில் - பூத்துக்குலுங்கி
சுகந்த மனம் வீசும்
நந்தவனமாகிறது - எனது
புலரும் பொழுதுகள்.
தலை கோதி
தோள் சாய்த்து
விரல் கோர்த்து - காதலால்
புன்சிரிப்பின் பக்கங்களை
மெல்ல புரட்டுகையில்
புதுதாய் புரிகின்றன
எனது இல்வழ்வின்
அர்த்தங்கள்.
--- " செல்லம் " ரகு.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
