நிலவு ஒரு பெண்ணாக
என்னே துணிவு.....!!!
இருள் தவழும் நள்ளிரவில்..
இத்தனை அழகுடன் நீ....!!!
அதுவும்
தனியே உலவுகின்றாய்....!!!
நிலா மகளே...!!
யாரும் தொட முடியாத
தூரத்தில் உள்ள துணிச்சலோ.....??
ஆனால் ஏன்....???
நான் அந்தி கருக்க...
அன்ன நடைப் பயின்றால் கூட
அன்னை வளர்ப்பினை ஏளனம் செய்கின்றனர்....????
ஓ.... அறிந்து கொண்டேன்....!!
நீ இயற்கையின் மகள்...
நான் இந்தியாவின் மகள் தானே...!!!!