தோல்வி

வானில் நட்சத்திரம் போல் தொலைதூரத்தில்
இருந்தது என் இலக்கு

இலக்கை முன்வைந்த என் பயணம்
வெற்றியா? தோல்வியா? என்றது

நினைத்த கனம் வெல்ல இயலாது
படிப் படியாய் ஆரம்பித்தது

பல தொடர் முயற்சிகள்
தொடர்ந்து சென்றது...

விடுகதை வினாபோல்
விசித்திரமானது என் பயணம்

நம்பிக்கை நாணயமற்ற மனிதர்கள் போல்
மனதில் குலைந்தது

ஒரு கனம் வெற்றிக்காக ஏங்கும் மனமோறம்
மறு கனம் தோல்வியால் சலிக்கும் மனமோறம்

மழலை நடை போல் இருந்தது
அத்தொடர் முயற்சியில் வந்த தோல்வி

தோல்விகள் தொடர்ந்து வந்தது
ஒரு கட்டத்தில் மகிழ்ச்சியானது

ஓர் வெற்றியால் கிடைத்திருக்கா
ஆயிரம் தோல்வியின் அனுபவம்

எழுதியவர் : நிஸார் முஹமது (16-Mar-15, 10:33 pm)
Tanglish : tholvi
பார்வை : 194

மேலே