கடலுக்குள் வந்தால் சுட்டுக் கொல்லுவோம்நட்பு நாடு இலங்கை

கடலுக்குள் வந்தால் சுட்டுக் கொல்லுவோம்...நட்பு நாடு இலங்கை...?
கடலுக்குள் வந்தால் கைது செய்வோம் - பகை நாடு பாகிஸ்தான்....!
தனியார் தொலைகாட்சிக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் மீனவர் பிரச்சினை பற்றி அவர் கூறுகையில்,
இலங்கையின் எந்த கடற்பகுதிக்குள்ளும் யாராவது நுழைய முயன்றால் அவர்களை சுட்டுக்கொல்லும் உரிமை இலங்கையின் கடற்படைக்கு இருக்கிறது.
இது ஒன்றும் புதிய விஷயமல்ல என்று குறிப்பிட்டார்.
தமிழக மீனவன் கடலுக்குள் வந்தால் சுட்டுக் கொல்லும் உரிமை இலங்கை கடற்படைக்கு உண்டு என்று சொல்லுகிறார் ரணில் அவர்கள்...
நமக்கு வரும் டவுட்டு என்னவென்றால்....
சண்டைக்கு முன்னால் வாரம் இரண்டு தடவை இந்திய வெளியுறவு அதிகாரிகள் / தூதர்கள் ட்ரிப் அடித்த வண்ணம் இருந்தார்கள் அல்லவா...?
அப்பொழுது சுட்டுக் கொல்லும் ஒப்பந்தம் ஏதும் போட்டுள்ளார்களா என்பதே....?
அய்யா ரணில்..... வெளிப்படையாக சொல்லுங்கள்...அப்பத்தானே நாங்க எளிதாக புரிந்து கொள்ள முடியும்....
என்ன நா சொல்றது...?
- சங்கிலிக்கருப்பு -