பாகிஸ்தான் நாட்டின் சர்ச் மீது தற்கொலை படை தாக்குதல் ஏன்ஏன்

பாகிஸ்தான் நாட்டின் சர்ச் மீது தற்கொலை படை தாக்குதல்....! ஏன்...ஏன்....?
தற்கொலை படையைச் சேர்ந்த இருவர் உயிரோடு எரிப்பு....பொதுமக்கள் ஒன்று கூடி இருவரை எரித்துக் கொன்றனர்....
பாகிஸ்தானில், பஞ்சாப் மாகாணத்தின் தலைநகர் லாகூரில் கிறிஸ்தவர்கள் பெருவாரியாக வசித்து வருகிற யோகனாபாத் என்ற இடத்தில்,
பிரசித்தி பெற்ற ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயமும், அதன் அருகில் கிறிஸ்து ஆலயம் என்ற பெயரில் மற்றொரு ஆலயமும் உள்ளது. கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை கடைப்பிடித்து வருகிற நிலையில்,
இந்த 2 ஆலயங்களிலும் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்து கொண்டிதபோது தற்கொலை தீவிரவாதிகள், தங்கள் உடலில் கட்டி இருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.
இந்த தற்கொலை படை தாக்குதலில் மொத்தம் 15 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். அவர்களில் ஒரு சிறுவன், ஒரு சிறுமி, 2 போலீஸ்காரர்களும் அடங்குவார்கள்.
80–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த கொடூரமான தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலீபான் தீவிரவாத அமைப்பில் இருந்து பிரிந்து வந்த ‘ஜமாத்–உல்–அஹ்ரார்’ என்ற அமைப்பு உடனடியாக பொறுப்பேற்றது.
இந்த நிலையில், மேற்கண்ட சம்பவத்தில் தொடர்புடயவர்கள் என சந்தேகிக்கப்படும் 17 பேரை பாகிஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர்.
அதேபோல், இந்த சம்பவம் தொடர்பாக தலீபான் தீவிரவாதிகள் மற்றும் இரண்டு பேரை உயிரோடு எரித்தவர்கள் ஆகிய இருவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை போலீசார் பதிவு செய்துள்ளனர்.
- இது செய்தி -
தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள் மீது பொதுமக்கள் தண்டனை வழங்கினார்கள்...இதைத்தான் அமெரிக்க மற்றும் அவர்களது அரசுகள் விரும்புகின்றன....இவற்றை நோக்கிய மூவ்கள் வெற்றியடைந்துள்ளன.....
இந்த சம்பவம் ஒரு செய்தியை / கருத்துக்களை கொண்டுள்ளது...
எங்கே சொல்லுங்கள் பார்ப்போம்....
- சங்கிலிக்கருப்பு -